மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

ஆக்சிஜன்: தொடரும் உயிரிழப்புகள்!

ஆக்சிஜன்: தொடரும் உயிரிழப்புகள்!

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாட்டால், நிலைமை கையை மீறி சென்றுள்ளது. குறிப்பாக டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாளுக்கு நாள் ஏற்படும் உயிரிழப்புகள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஏழு நாட்களாக ஆக்சிஜன் பற்றாக்குறையினால் டெல்லி மிகப்பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 348 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் கங்காராம் மருத்துவமனையில் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்றிரவு(ஏப்ரல் 23) மற்றொரு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் டி.கே.பலூஜா கூறுகையில், ”நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த பிரிவில் ஆக்சிஜன் சப்ளை மிக குறைவாகவே இருந்தது என்பது உண்மைதான். ஆனால், இறந்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். சாதாரண நோயாளிகளால் இந்த நிலைமையை சமாளிக்க முடியும். நோய்தொற்று அதிகமாக இருக்கும் நோயாளிகளால் இதை சமாளிக்க முடியாது. இந்நிலையில்தான், நேற்று நள்ளிரவு 20 பேர் உயிரிழந்தனர்.

மேலும்,கையிருப்பில் இருக்கும் ஆக்சிஜன் ஒன்றரை மணி நேரத்துக்கு மட்டுமே தாக்குபிடிக்கும் என்பதால், சிகிச்சையில் இருக்கும் 215 நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஆக்சிஜன் சப்ளைசெய்ய வேண்டும்.

தேவையான மொத்த ஆக்சிஜனில் 20 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. நாங்கள் மட்டுமே ஆக்சிஜன் பற்றாக்குறை என்று புகார் கூறவில்லை. டெல்லியில் ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறை குறித்து புகார் அளிக்கும் பல மருத்துவமனைகளில் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையும் ஒன்று என்று கூறினார்.

அதுபோன்று நீல்காந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 48 மணி நேரமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறோம். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கு முன் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படாது என்று தெரிவிப்பதாக நீல்காந்த் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 24 ஏப் 2021