மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

மருத்துவமனைகளில் மக்கள் குவிய வேண்டாம்!

மருத்துவமனைகளில் மக்கள் குவிய வேண்டாம்!

கொரோனா அதிகரிப்பால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மற்ற மாநிலங்கள் போன்று தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 13,776 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 78 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இன்று இரவு 10 மணிமுதல் 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு, அதை தொடர்ந்து ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என மொத்தம் 30 மணிநேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் இன்று(ஏப்ரல் 24) செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,” தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால், மக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம். நோய் தொற்றுள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையில்லாமல் தாங்களாகவே ரெம்டெசிவர் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும்ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவதில்லை. தமிழகம் சவாலான காலகட்டத்தில் உள்ளது.மக்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சென்னையில் உள்ள 12 ஸ்கிரீனிங் சென்டர்களில், மக்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம். மக்கள் காய்ச்சல் கண்காணிப்பு மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் புதிதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போதுமான படுக்கை வசதிகள் இருப்பினும், கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். கொரோனா சிகிச்சை மையங்களில் 9,503 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கலனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் புறநகர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்படவுள்ளது

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் உள்ளன. செவிலியர்கள், மருத்துவர்கள் கூடுதல் பணிசுமையுடன் பணியாற்றி வருகின்றனர்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,” தமிழகத்தில் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது. தற்போது தமிழகத்தில் மொத்தமாக, 95,048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50.8 சதவிகித்தினர், அதாவது 48,289 பேர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். 8,414 பேர் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24,569 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி,மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்படும் சம்பவம் போன்று தமிழகத்திலும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 25) முழு ஊரடங்கின்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்தவித தடையும் இல்லை” என கூறினார்.

வினிதா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

சனி 24 ஏப் 2021