மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

கொரோனா: நான்காவது மருந்துக்கு அனுமதி!

கொரோனா:  நான்காவது மருந்துக்கு அனுமதி!

கொரோனா சிகிச்சைக்கு ஜைடஸ் நிறுவனத்தின் விராஃபின்(virafin) மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே வழி, தடுப்பூசி. அதனால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆரம்பத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, அவசர கால பயன்பாட்டில் இருந்த ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

தற்போது, நான்காவதாக, கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தை ஜைடஸ் காடிலா என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் விராஃபின் வெற்றிகரமாக செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்து மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 91.15 சதவீதம் பேருக்கு 7 நாட்களுக்கு பிறகு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது. அதில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்தது. இந்த சிகிச்சையானது நோயாளிகளுக்கு துணை ஆக்சிஜனின் மணிநேரத்தையும் குறைக்கிறது.

நாடு முழுவதும் 20-25 மையங்களில் சோதனை நடத்தப்பட்டது, விராஃபின் எடுத்து கொண்ட நோயாளிகளுக்கு குறைவான அளவே ஆக்சிஜன் தேவைப்படுகிறது. சுவாசக் கோளாறு பிரச்சினையும் கட்டுப்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஜைடஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயின் ஆரம்பத்தில் இந்த மருந்தை பயன்படுத்தினால் நோயாளிகள் விரைவாக குணமடைய இந்த மருந்து உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

சனி 24 ஏப் 2021