மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

இன்னும் எத்தனை அவலங்களை பார்க்க வேண்டுமோ?

இன்னும் எத்தனை அவலங்களை பார்க்க வேண்டுமோ?

கொரோனாவால் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நெஞ்சை பதற வைக்கின்றன. தொற்று நோய்க்கு கொத்து கொத்தாக மடியும் மக்கள் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் இறந்ததற்கு பின்பு சடலங்கள் கொண்டு செல்லப்படுகிற விதம், எரிக்கப்படுகிற விதம் தொடர்பாக வெளியாகும் வீடியோ காட்சிகள் கொடூரமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனால், தொற்றுக்கு பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக வடமாநிலங்களில் அதிகளவில் உயிரிழப்புகள் நடந்து வருகின்றன. தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இடம் இல்லாமல், நடு ரோட்டிலும், மரத்துக்கு அடியிலும் வைத்து சிகிச்சை அளிப்பதை பார்க்க முடிகிறது. படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் தாங்கள் வந்த வாகனத்தில் இருந்தபடியே மக்கள் சிகிச்சை பெற்று வரும் அவலத்தையும் காண முடிகிறது.

தொற்று தீவிரமாக இருக்கிற வேளையில், நாட்டில் ஆக்சிஜன் இல்லை, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு, பிணங்களை எரிக்க இடமில்லாமல் ஒரே இடத்தில் குவியலாக போட்டு எரிக்கின்ற நிலைமை என நாட்டில் நடக்கும் அவலத்துக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கின்றது.

தலைநகர் டெல்லியில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமை, நோயின் தீவிரம் உள்ளிட்டவற்றால் பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. டெல்லியில் நிலைமை கைமீறி சென்றுவிட்ட நிலையில், டெல்லியின் மயானங்கள் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் புதைப்பதற்கு இடமில்லாமல் மக்கள் தங்கள், மத, வழக்கங்களை கடைபிடிப்பதை தவிர்த்துவிட்டு உடல்களை எரிக்கின்றனர். மயானங்களிலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மக்கள் திறந்த மைதானங்களில் வைத்து கொரோனா நோயாளிகளின் உடல்களை எரியூட்டி வருகின்றனர். இதுகுறித்து வெளியான ட்ரோன் காட்சிகள் மனதை பதை பதைக்க வைக்கின்றது.

உடல்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து எரிக்கப்படுகின்றன. ஒரு பாலத்தின் கீழ் ஆற்று மணலில் பிணங்களை வரிசையாக அடுக்கி வைத்து எரிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபோன்று மத்திய பிரதேசம் மாநிலம் விடிசா என்ற பகுதியில் கொரோனாவால் இறப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ நிர்வாகமே உடல்களை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து வெளியான வீடியோ ஒன்றில், மருத்துவமனையில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் வெளியே வருகிறது. ஆம்புலன்ஸ், கதவுகளில் உள்ள கண்ணாடி எல்லாம் உடைந்து பாதியாக இருக்கிறது. வெளியே வந்து கொண்டிருக்கும்போதே, ஆம்புலன்ஸ் பக்கவாட்டு கதவு திறந்து கொள்கிறது. அதிலிருந்து ஒரு பிணம் தொப்பென்று சாலையில் விழுகிறது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியுடன் ஓடி சென்று பார்க்கின்றனர். பின்பு, ஆம்புலன்ஸ் டிரைவர் இறங்கி வந்து, மீண்டும் பிணத்தை எடுத்து வண்டியில் வைத்து கொண்டு செல்கிறார்.

சமூகவலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ குறித்து மக்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ”மத்திய பிரதேசத்தின் நிலை இதுதான், கடந்த 17 ஆண்டுகளாக பிஜேபி ஆட்சியில் இருக்கிறது. மாநிலத்தின் அவலநிலை இதுதான்” என மக்கள் குமுறி வருகின்றனர்.

நாட்டின் நிலைமை எங்கே செல்கிறது, நமக்கா இந்த நிலைமை என்று மக்கள் கதறுகின்றனர்.

View this post on Instagram

A post shared by SUHAIL KANDAK (Deals) (@suhailkandak)

வினிதா

.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 24 ஏப் 2021