மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஏப் 2021

இந்தியாவுக்கு ‘நோ-என்ட்ரி’ போட்ட நித்தி

இந்தியாவுக்கு ‘நோ-என்ட்ரி’ போட்ட நித்தி

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவிலிருந்து கைலாசா வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் நித்தியானந்தா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளின் மூலம் பிரபலமடைந்த நித்தியானந்தா சமீபத்தில், கைலாசா என்ற பெயரில் தனித் தீவு ஒன்றை உருவாக்கி, அதற்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் உருவாக்கிவிட்டதாக வீடியோக்கள் வெளியாகின. மேலும், கைலாசாவில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அடுத்து, கைலாசாவில் ஹோட்டல், டீக்கடை தொழில் தொடங்க நித்தியானந்தாவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர்.

சமீபத்தில் ஏராளமான நகைகளை உடம்பில் மாட்டிக் கொண்டு வெங்கடேச பெருமாள் போன்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். நாளுக்கு நாள் வியப்பில் ஆழ்த்தும் நித்தியானந்தா இருக்கும் கைலாசா என்ற தீவு எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாததுதான் பிரச்சினை.

இந்த நிலையில், நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில், "கொரோனா இரண்டாவது அலையின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்திருப்பதால், கைலாசா நாட்டுக்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் அதிகமுள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கைலாசாவில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறிய நித்தியானந்தாவின் இந்த அறிவிப்புக்குப் பலரும் பல்வேறு விதமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எங்கே கைலாசா இருக்கிறது, அதற்கு எப்படி செல்ல வேண்டும், விமானம் மூலமா அல்லது வேறு எந்த வழியில் செல்ல வேண்டும் போன்ற எதுவுமே தெரியாத நிலையில், இந்தியர்கள் எப்படி கைலாசாவுக்குச் செல்ல முடிவு எடுப்பார்கள் என பலர் கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.

ட்விட்டர் பயனர்கள் நித்தியானந்தாவின் இந்த "நிர்வாக உத்தரவை" சிரிக்கும் எமோஜிகளுடன் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக பல்வேறு நாடுகள், மற்ற நாட்டு மக்கள் வருவதற்கு தடை விதித்துள்ளது உண்மை என்றாலுமே, கூகுள் மேப்பிலே இல்லாத நாடும், இந்திய மக்களுக்குத் தடை விதித்துள்ளதுதான் ஹைலைட்.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 23 ஏப் 2021