மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஏப் 2021

அவதூறு வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ்!

அவதூறு வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ்!

கோவை திமுக நிர்வாகி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை திமுக நிர்வாகி சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் சென்றபோது, மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்துள்ளார். அந்த சம்பவம் உள்நோக்குடன் நடந்தது இல்லை என்றும், நீரழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாகவும் சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார். தான் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும், ரயில் பயணத்தின்போது, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேர்தல் பிரச்சாரங்களில் தன்னை பற்றி அவதூறு பேசி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் வேலுமணி மீதும் சூலூர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று(ஏப்ரல் 22) நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நடந்தது. இந்த வழக்கு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

வியாழன் 22 ஏப் 2021