மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஏப் 2021

முதல்வரிடம் நலம் விசாரித்த ஓபிஎஸ்

முதல்வரிடம் நலம் விசாரித்த ஓபிஎஸ்

குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்தனர். தேர்தல் முடிந்த பிறகு, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்த கரையில் இருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு லேப்ரோஸ்கோபி முறையில் குடலிறக்க சிகிச்சை நடைபெற்றது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்ததையடுத்து, ஏப்ரல் 20ஆம் தேதி முதல்வர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

தற்போது மருத்துவர்கள் அறிவுரைப்படி, முதல்வர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், பசுமைவழிச்சாலையில் இருக்கும் முதல்வர் இல்லத்துக்கு இன்று(ஏப்ரல் 22) காலை நேரில் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வியாழன் 22 ஏப் 2021