மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஏப் 2021

யெச்சூரியின் மகன் உயிரை பறித்த கொரோனா!

யெச்சூரியின் மகன் உயிரை பறித்த கொரோனா!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பது போன்று, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,104 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஷிஷ் யெச்சூரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காலை 6 மணியளவில் ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்ததாக செய்தி வெளியானது.

இதுகுறித்து சீதாராம் யெச்சூரி ட்விட்டரில்,”எனது மூத்த மகன் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று காலை உயிரிழந்து விட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கை அளித்து எனது மகனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஆஷிஷ் யெச்சூரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மதிமுக தலைவர் வைகோ, தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் என அனைவரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின்,” ஆஷிஸ் யெச்சூரி அவர்களின் மறைவு செய்தி கேட்டு தான் மிகுந்த வலியும் வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடக்கூடிய சீதாராம் யெச்சூரி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஆஷிஷ் யெச்சூரி கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி இருந்தால், ஜூன் 9 ஆம் தேதி தன்னுடைய 35 வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார் என யெச்சூரியின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் அமைந்துள்ள ACJ கல்லூரியில் இதழியல் பட்டப்படிப்பை முடித்த ஆஷிஸ் யெச்சூரி டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல செய்தித்தாள் நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஏ.கே.வலியா(72) கொரோனா தொற்று காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஏ.கே.வலியா காலமானார். இவரின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 22 ஏப் 2021