மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

கோவிஷீல்டு இருமடங்கு உயர்வு: யார் கட்டணத்தை செலுத்துவது?

கோவிஷீல்டு இருமடங்கு உயர்வு: யார் கட்டணத்தை செலுத்துவது?

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு உயர்த்தி அறிவித்துள்ளது சீரம் நிறுவனம்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி துரிதபடுத்தப்பட்டுள்ளது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

மருந்து நிறுவனங்கள், உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50 சதவிகித தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுசந்தை விற்பனைக்கும் அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை மருந்து நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. தடுப்பூசிகளின் விலையை உற்பத்தியாளர்களே நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, சீரம் நிறுவனம் 'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கான விலையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு மருத்துவமனைகளில் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளில் 600 ரூபாய்க்கும் தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று, அமெரிக்காவில் ரூ.1,500க்கும், ரஷ்யா மற்றும் சீனாவில் தலா ரூ. 750க்கும் கொரோனா தடுப்பூசி விற்கப்படுகிறது. உலகில் மற்ற நாடுகளுடன் ஒப்பீடும்போது இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கும் கொரோனா தடுப்பூசி டோஸ் விலையை உயர்த்தியுள்ளபோதும் மத்திய அரசுக்கு தடுப்பூசியை முந்தைய விலையான 250 ரூபாய்க்கே தொடர்ந்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரூ.400 கட்டணத்தை யார் செலுத்துவது? தடுப்பூசிக்கான கட்டணத்தை மாநில அரசு செலுத்துமா அல்லது பொதுமக்கள் செலுத்த வேண்டுமா? என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 21 ஏப் 2021