மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி மனு!

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி மனு!

மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கக் கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிற நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், ரயில்களில் ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஸ்டெர்லைட் காப்பர் ஆலை உட்புறம், 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகு உள்ளது. இது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவின்படி மூடப்பட்டுள்ளது.

இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். அதனால், ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரித்து அதை இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையினால், அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் உடல்நலமும், சுற்றுசூழலும் பாதிக்கப்படுவதாகக் கூறி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

புதன் 21 ஏப் 2021