மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

தடுப்பூசி: தமிழகத்தின் சாதனை!?

தடுப்பூசி: தமிழகத்தின் சாதனை!?

நாடு முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை 23 சதவிகித தடுப்பூசிகள் வீணாகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை எப்படி மறுக்க முடியாதோ, அதுபோன்று மாநிலங்களில் தடுப்பூசி மருந்துகள் வீணாவதையும் மறுக்க முடியாது.

இந்தியா முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது நான்காம் கட்டமாக மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில அளவில் வீணான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

ஏப்ரல் 11ஆம் தேதி வரை இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 10 கோடியே 34 லட்சம் டோஸ்களில், 44 லட்சத்து 78 ஆயிரம் டோஸ்கள் வீணாகி இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

தடுப்பூசி வீணாவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதாவது, தமிழகத்தில் 12.10 சதவீதமும், ஹரியானாவில் 9.74 சதவீதமும், பஞ்சாப்பில் 8.12 சதவீதமும், மணிப்பூரில் 7.8 சதவீதமும், தெலங்கானாவில் 7.55சதவீதமும் தடுப்பூசி வீணாகியுள்ளது.

கேரளா, மேற்குவங்கம், ஹிமாச்சல் பிரதேஷ், மிசோரம், கோவா, டாமன் டையு, அந்தமான் நிக்கோபர் தீவுகள் , லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களில் ஒரு சதவீதம் கூட தடுப்பூசி வீணாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடியும் மற்றும் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கும், ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்திற்கு ரூ.1,567 கோடியும் கடனுதவி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

செவ்வாய் 20 ஏப் 2021