மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

நெடுஞ்சாலைத் துறையில் முறைகேடா? நீதிமன்றம் உத்தரவு!

நெடுஞ்சாலைத் துறையில் முறைகேடா? நீதிமன்றம் உத்தரவு!

நெடுஞ்சாலைத் துறை மண்டலக் கணக்காளர்கள் பணிக்கான தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல். ரவி பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் 2016ஆம் ஆண்டு முதல் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த தேர்வில் தேர்வான 10 பேரின் தேர்வை ரத்து செய்ய அரசு செயலாளர் பரிந்துரை செய்திருந்த நிலையில், நெடுஞ்சாலை துறை இயக்குனர் 8 பேரின் தேர்ச்சியை மட்டுமே ரத்து செய்திருந்தார்.

டிஎன்பிஎஸ்சியில் நடந்த முறைகேடு போல, விடைத்தாள்களை மாற்றம் செய்து தேர்வு முடிவுகளை நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது. எற்கனவே மண்டல கணக்காளர் மீது நான்கரை லட்ச ரூபாய் லஞ்ச ஒழிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. அதனால் இந்த தேர்வு முறைகேடு குறித்து முழுமையாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று(ஏப்ரல் 20) தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு தலைமை கணக்காளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தலைமைக் கணக்காளர் நடத்திய விசாரணையில், தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, 16 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், இந்த தேர்வு முறைகேடு புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

வினிதா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

செவ்வாய் 20 ஏப் 2021