மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

எடப்பாடி ஆபரேஷன் சக்சஸ்-இன்று டிஸ்சார்ஜ்!

எடப்பாடி  ஆபரேஷன் சக்சஸ்-இன்று டிஸ்சார்ஜ்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து இன்று (ஏப்ரல் 20) சென்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுதும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இதனால் உடல் நலக் குறைவும் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தேர்தலுக்குப் பிறகு நடத்திக் கொள்ளலாமா என்று முதல்வர் கேட்க,மருத்துவர்களும் அதற்கு அனுமதி அளித்தனர்.

அதன்படி தேர்தல் பிரச்சாரம், தேர்தல், தேர்தலுக்குப் பிறகான ஆலோசனைகள் எல்லாம் நடத்தி முடித்த எடப்பாடி பழனிசாமி, நேற்று (ஏப்ரல் 19) குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்த கரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு முன்பு அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்திருக்கிறது. அதையடுத்து நேற்றே அறுவை சிகிச்சையை முடித்தனர் மருத்துவர்கள்.

மருத்துவமனையிலேயே மூன்று நாட்கள் தங்கியிருக்கலாம் என்று முதலில் திட்டமிட்ட முதல்வர், பின் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்றே (ஏப்ரல் 20) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் தனது இல்லத்திலேயே முதல்வர் மூன்று நாட்கள் முழு ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

-வேந்தன்

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

செவ்வாய் 20 ஏப் 2021