மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

இந்திய தேர்தல் ஆணையருக்கு கொரோனா!

இந்திய தேர்தல் ஆணையருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் பரவல் இந்திய தேர்தல் ஆணையத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.1761 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி பாதிப்பு தொடர்ந்து இரண்டரை லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இந்திய புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த தகவலை இந்திய தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மற்றும் மேற்குவங்கத்தில் இன்னும் மூன்றுகட்ட வாக்குப்பதிவுகள் இருப்பதால், இருவரும் வீட்டில் இருந்தே காணொலி வாயிலாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 20 ஏப் 2021