மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஏப் 2021

உச்சத்தில் கொரோனா: இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை ரத்து!

உச்சத்தில் கொரோனா: இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை ரத்து!

இந்தியாவில் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி இன்று (ஏப்ரல் 18) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

“ ஏப்ரல் 25-26 தேதிகளில் ஜான்சன் இந்தியா வர திட்டமிடப்பட்டிருந்தது. இதை அறிவித்த , ’தற்போதுள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து பிரதமர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரமாட்டார் என்று பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான உறவுவுகளை வலுப்படுத்தும் கூட்டங்களையும், சந்திப்புகளையும் இரு தரப்பினரும் எதிர்வரும் நாட்களில் மெய்நிகர் முறையில் நடத்தவுள்ளனர்.

இரு தலைவர்களும் இந்தியா-இங்கிலாந்து கூட்டணியை அதன் முழு திறனுக்கும் எடுத்துச் செல்வதில் மிகுந்த முக்கியத்துவ கவனத்தைக் கொண்டுள்ளனர், மேலும் இது தொடர்பாக நெருங்கிய தொடர்பில் இருக்கவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நேருக்கு நேர் சந்திப்பை வைத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலகம் ஏப்ரல் மாத இறுதியில் ஜான்சன் இந்தியாவுக்குப் பயணம் செய்வதாக அறிவித்திருந்தது. பிரெக்சிட்டைத் தொடர்ந்து அவரது முதல் முக்கிய பயணமாக இந்தியப் பயணம் திட்டமிட்டப்பட்டிருந்தது.

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 19 ஏப் 2021