மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஏப் 2021

தியேட்டர்களை மூடலாமா?: உரிமையாளர்கள் அவசர கூட்டம்!

தியேட்டர்களை மூடலாமா?: உரிமையாளர்கள் அவசர கூட்டம்!

தமிழகம் மீண்டும் ஒரு ஊரடங்கை எதிர்கொள்ளப் போகிறது. மனதளவில் மக்களை தயார்ப்படுத்துவதற்கான முன்னோட்டம்தான் இரவு நேர ஊரடங்கு என்கிற பேச்சு அதிகரித்து வருகிறது. இரவு 9 மணிக்கு ஊரடங்கு நடைமுறை தொடங்குவதால் திரையரங்க தொழில் முடங்க கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் முழுமையான ஊரடங்கு மக்களைப் பாதிக்காது என்கிற நோக்கத்தில் அரசால் எடுக்கப்பட்ட இந்த முடிவால் பிற தொழில்களைக் காட்டிலும் மோசமான நஷ்டத்தைத் திரையரங்க தொழில் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில்.

கொரோனா ஊரடங்குக்குப் பின் ஜனவரி மாதம் திரையரங்குக்குப் பொதுமக்கள் படம் பார்க்க வர தொடங்கினார்கள். திரையரங்குகள் ஓரளவு மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜனவரியில் மாஸ்டர் படத்திற்குப் பின் பெரிதாகப் படங்கள் வெளிவராததால் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடிவைக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் வெளியான சுல்தான்,கர்ணன் ஆகிய இரு படங்களால், உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவருக்குச் சுவாசிக்க ஆக்சிசன் வழங்குவது போன்று நஷ்டத்தில் மூழ்கிக்கொண்டிருந்த தியேட்டர்கள் புத்துணர்ச்சி அடையும் வகையில் வசூல் இருந்தது. அடுத்தடுத்து நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள் வர தொடங்கினால் சிரமமின்றி தியேட்டர் தொழில் நடக்கும் என்ற நம்பிக்கைக்கு ஆசிட் ஊற்றுவதாக இருக்கிறது ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு என்கின்றனர்.

வாரம் முழுவதும் வேலைக்குச் செல்லும் குடும்ப உறுப்பினர் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளில்தான் தியேட்டருக்கு படம் பார்க்க குடும்பத்துடன் வருவார்கள். அன்று மட்டும் திரையரங்க தொழிலில் சுமார் 20 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இருக்கும்.

அது மட்டுமின்றி 9 மணிக்கு இரவு நேர ஊரடங்கு தொடங்குகிறது. மாலை 6.30 மணி காட்சிக்கு படம் பார்க்க வருகின்றவர்கள் படம் முடிந்து வீடு சென்றடைய 10 மணி ஆகி விடும். இது புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் படம் பார்க்க வருபவர்களுக்கு காவல்துறையினால் பெரிய அளவில் சோதனை, நெருக்கடிகள் ஏற்படாது நகர்புற தியேட்டர்களில் படம் பார்க்க வருகின்றவர்கள் மாலைக்காட்சி முடிந்து வீடு சென்றடைவதற்கு காவல்துறையிடம் கடுமையான சோதனை, சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இதனை விரும்பாதவர்கள் மாலைக்காட்சியில் படம் பார்ப்பதை தவிர்த்துவிடுவார்கள்.,.

எஞ்சியிருக்கும் இரண்டு காட்சிகளை நம்பித்தான் தியேட்டரை நடத்த முடியும் அதனை நம்பி தயாரிப்பாளர்கள் புதிய படங்களை வெளியிட முயற்சிக்க மாட்டார்கள் இதனால் தியேட்டர் தொழில் முற்றிலுமாக முடங்குவதற்கான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம். தமிழக அரசின் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு பற்றி திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணி

அரசு இரவு நேர, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்து தியேட்டர்களில் இரவுக் காட்சிகள் திரையிடுவதை ரத்துசெய்யவும், ஞாயிற்றுகிழமைகளில் முழுமையாக தியேட்டர்களை முழுமையாக மூடவும் நடவடிக்கை எடுத்துள்ளது

ஏற்கனவே தியேட்டர்களில் தினமும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் இனிமேல் புதிய படங்கள் எதுவும் திரைக்கு வராது.

தியேட்டர்களுக்கு பார்வையாளர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் எங்களுக்கு தண்டனையாம். இது விசித்திரமாக இருக்கிறது படம் பார்க்க வருபவர்கள் செய்கிற தவறுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும். ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் 112 தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டது. மூடப்படும் நிலையில் 200 தியேட்டர்கள் இருக்கிறது. எனவே நாளை செவ்வாய்கிழமை காலை ஜும் செயலியில் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் நடத்தி ஆலோசிக்க இருக்கிறோம். அக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களையும் மூட முடிவைடுக்க உள்ளோம் என்றார் திருப்பூர் சுப்பிரமணியம்.

-இராமானுஜம்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

திங்கள் 19 ஏப் 2021