மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஏப் 2021

முதல்வர் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வருமா?

முதல்வர் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வருமா?

கொரோனா பரவல் குறித்தும், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

பசுமைவழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று(ஏப்ரல் 18) மதியம் 12 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினரசி பாதிப்பு 9,000 ஐ கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்கலாமா அல்லது மற்ற மாநிலங்களில் உள்ளதுபோன்று இரவுநேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு விதிக்கலாமா ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று பிற்பகலில் இருந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருவதை காண முடிந்தது. இதனால், பலரும் தங்களின் பயணத்தை விரைவில் முடித்து விட்டு வீடுகளுக்கு திரும்பினர். கொரொனா பரவல் ஒருபக்கம் அதிகரித்து கொண்டு போவது போல், மற்றொரு பக்கம் ஊரடங்கு குறித்தான வதந்திகளும் அதிகரித்து செல்கின்றன.

இதுபோன்ற வதந்திகளுக்கு மத்தியில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் வருமா அல்லது ஊரடங்கு விதிக்கப்படுமா என்பது கூட்டத்துக்கு பின்னரே தெரிய வரும்.

வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

ஞாயிறு 18 ஏப் 2021