மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஏப் 2021

கும்பமேளா சென்றவர்களுக்கு செக் வைக்கும் மாநில அரசுகள்!

கும்பமேளா சென்றவர்களுக்கு செக் வைக்கும் மாநில அரசுகள்!

கும்பமேளாவுக்கு சென்று வருபவர்களுக்கு கட்டாய பரிசோதனை மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையிலும், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உத்தரகாண்ட் ஹரித்வாரில் கும்பமேளா திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. நான்கு நாட்கள் நடைபெறும் புனித நீராடல் நிகழ்வில், மூன்றாவதாக நடந்த புனித நீராடலில் கிட்டதட்ட 43 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனால், 54 சாதுக்கள் மற்றும் 2,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக சில சாது அமைப்புகள் கும்பமேளா விழாவை விட்டு வெளியேறின. மேலும், கடைசியாக நடைபெறக் கூடிய நீராடல் நிகழ்வில் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டாம். இரண்டு சாதுக்கள் அமைப்புகள் மட்டுமே இதில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், கும்பமேளாவுக்கு வந்து சென்றவர்களுக்கு சில மாநிலங்கள் செக் வைத்துள்ளனர். ஹரித்வாருக்கு சென்று திரும்பும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என குஜராத், டெல்லி மற்றும் ஒடிசா அரசுகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இன்று டெல்லி தலைமை செயலாளர் விஜய் தேவ் வெளியிட்டுள்ள உத்தரவில்,”டெல்லியில் கொரோனா பரவலின் தன்மையை மதிப்பாய்வு செய்யவும், அதனை கட்டுப்படுத்தும் வகையிலும், கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி, டெல்லியிலிருந்து கும்பமேளாவுக்கு சென்றவர்கள், செல்லக் கூடியவர்கள் மீண்டும் டெல்லி திரும்பிய பின்பு, வீட்டிலேயே தங்களை 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 4 முதல் 17 ஆம் தேதிவரை கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய டெல்லி மக்கள், தங்கள் விவரங்களை அடுத்த 24 மணிநேரத்துக்குள் டெல்லி அரசின் கொரோனா கட்டுப்பாட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதுபோன்று, ஏப்ரல் 18 முதல் 30ஆம் தேதிவரை கும்பமேளாவுக்கு செல்பவர்களும் தங்கள் விவரங்களை டெல்லியைவிட்டு செல்லும் முன்பாக தனியாக குறிப்பிட வேண்டும்.

அரசின் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து மாவட்ட நீதிபதி கண்காணிப்பார்” என தெரிவித்துள்ளார்.

அதுபோன்று ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்வதுடன் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இனி கும்பமேளா செல்லக் கூடியவர்கள், தங்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பமேளா திருவிழாவை மக்கள் கூட்டம் அதிகம் இல்லாமல் பெயரளவுக்கு நடத்தி முடிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததையடுத்து, கும்பமேளாவை விட்டு சில சாதுக்கள் வெளியேறிய நிலையில், சாதுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடைசி நாள் புனித நீராடலுடன் விழா முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வினிதா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

ஞாயிறு 18 ஏப் 2021