மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

இறப்பதற்கு 24 மணி நேரம் முன்பு கூட... விவேக்கின் விழிப்புணர்வு!

இறப்பதற்கு 24 மணி நேரம் முன்பு கூட... விவேக்கின் விழிப்புணர்வு!

சின்ன கலைவாணர் விவேக் மாரடைப்பால் காலமான சம்பவம் தமிழகத்தையே கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில்... அவரது மரணத்தையே அடிப்படையாக வைத்து கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை சிலர் பரப்பி விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கொரோனா தடுப்பூசி பற்றிய விளக்கத்தை தனது கடைசி செய்தியாளர் சந்திப்பின் மூலமாகவே சொல்லிச் சென்று , இறப்பதற்கு 24 மணி நேரம் முன்னதாகக் கூட விழிப்புணர்வுப் பணியைதான் செய்திருக்கிறார் விவேக்.

ஏப்ரல் 15 ஆம் தேதி காலை சென்னை ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக், அப்போதே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சோடு சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது விவேக், “ இன்று நான் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள்,, இந்த மருத்துவமனையின் டீன் டாக்டர் ஜெயந்தி அவர்களும், கோவிட் செக்‌ஷன் இன்சார்ஜ் ரமேஷ், மல்டி ஸ்பெஷாலிட்டி இன்சார்ஜ் அவர்கள் இருக்கும்போது நானும் எனது நண்பர்களும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோம்.

நான் ஏன் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று சில கேள்விகள் எழுகின்றன. அரசு மருத்துவமனைகள்தான் பெரும்பாலான மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சென்று சேரும் சேவை செய்து வருகிறது. இந்த தடுப்பூசி தொடர்பான பக்க விளைவு ஏற்படுமா என்று வதந்திகள் உலவுகின்றன. இதனால் ஆபத்து ஏற்படாது பாதுகாப்புதான் உண்டு என்று பொது மக்களுக்கு சொல்வதற்காகத்தான் அரசு மருத்துவமனைக்கு வந்து நான் இவர்கள் முன்னிலையில் தடுப்பூசி நான் போட்டுக் கொண்டேன்.

இந்தியாவிலும், தமிழகத்திலும் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. எனவே பொதுமக்களுக்கு சமூக ரீதியான பாதுகாப்பு முகக் கவசம், கை கழுவுதல். ஆனால் மருத்துவ ரீதியான பாதுகாப்பு தடுப்பூசி ஒன்றுதான். தடுப்பூசிதான் உங்கள் உயிரைப் பாதுகாக்கும். இதை போடுவதால் கோவிட் வராதா என்று கேட்கலாம். இரு டோஸ் போட்டு 15 நாட்கள் கழித்த பிறகுதான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அதுவரைக்கும் நாம் பாதுகாப்பு இல்லாமல் நடந்துகொண்டுவிட்டு தடுப்பூசி மீது பழி போடக் கூடாது

இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டாலும் வண்டி விபத்து ஏற்படாது என்று சொல்வது மாதிரிதான் இது. நாம் வண்டியை ஒழுங்காக ஓட்ட வேண்டும்.

அரசு மருத்துவர்கள் மருத்துவத்தை தொழிலாக செய்யாமல் சேவையாக செய்கிறார்கள். மிகத் திறமையானவர்கள். எனக்கு ஊசி போட்ட செவிலியர் ஜூலி ஊசி போட்டதே தெரியாமல் எனக்கு போட்டார்கள். திறமைசாலிகள் மருத்துவ ஊழியர்களாக இருக்கிறார்கள். அதனால் நீங்கள் நம்பி தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

மாஸ்க் ரொம்ப முக்கியம், கை கழுவுதல் முக்கியம், சமூக இடைவெளி மிக முக்கியம். அரசாங்கமே முகக் கவசத்தை கழற்றிவிடுங்கள் என்று சொல்லும் வரை இதை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்”என்றுதான் தனது பேட்டியில் தெரிவித்தார்.

தனது கடைசி பேட்டி இதுவென்று அறியாமல் செய்தியாளர்களை சந்தித்த விவேக் அப்போது கூட தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு, அரசு மருத்துவமனைகளின் சேவை, மருத்துவப் பணியாளர்களின் கனிவு ஆகியவற்றை குறித்தே விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 17 ஏப் 2021