மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

‘மரங்களும் கண்ணீர் விட்டு அழும்’ : விவேக்கிற்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி!

‘மரங்களும் கண்ணீர் விட்டு அழும்’ : விவேக்கிற்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி!

தமிழ் சினிமாவில், தன்னுடைய இன்றியமையாத நகைச்சுவையைக் கூட சமூக கருத்துக்களுடன் புகுத்தி எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர் நடிகர் விவேக்.

இன்று அவரது மறைவு  தமிழ் திரையுலகினரையும்,  ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மறைந்த விவேக்கின் உடலிற்கு நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  திரை பிரபலங்கள் மயில் சாமி, எம்.எஸ்.பாஸ்கர், சூரி, நாசர், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, கவுண்டமணி, நடிகை ஆர்த்தி,  ப்ரியா பவானி சங்கர்  உள்ளிட்ட பிரபலங்கள் காலையிலேயே நேரடியாக வந்து  தங்களுடைய அஞ்சலியைச் செலுத்தினர்.

நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரது  பெற்றோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

விவேக்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சங்கர், ‘விவேக் சார் எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.  திடீரென அவர் இல்லை என்பதை நம்ப முடியவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை. பாய்ஸ், அந்நியன், சிவாஜி ஆகிய படங்கள் வெற்றியடைய மிகப் பெரிய பங்கு அவருக்கு இருக்கிறது.  தனக்குச் சிறந்த கேரக்டர் கொடுத்ததாக எப்போதும் அவர் என்னிடம் சொல்லுவார்.

ஜெண்டில்மேன் படத்தில்,  “மனுசனா பொறந்தவன் ஒரு மரத்தையாவது நட்டுவிட்டு போகணும், நாலு பேருக்கு நிழல் கொடுக்குற மாதிரி ” என்று ஒரு வசனம் வைத்திருப்பேன். அவர் லட்சக் கணக்கான மரங்களை நட்டிருக்கிறார். இன்று அந்த மரங்களும் கண்ணீர் விட்டு அழும்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் நேரில் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "  திரையுலகம் மட்டுமின்றி சமூகத்தின் மீது மிகப்பெரிய அக்கறை கொண்டு, மரம் வளர்த்தல், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்று நல்ல சமூக சேவைகளைச் செய்தவர் விவேக்.

அதுமட்டுமல்ல, எல்லோரையும் அவர் சிரிக்க வைத்தவர். அவருடைய மகன் இறப்புக்குப் பின்னர் அவர் மன அழுத்தத்திலிருந்ததை நாங்கள் பலதடவை பார்த்திருக்கிறோம். விஜயகாந்த் மீது அவருக்கு மிகப்பெரிய பற்று உண்டு. அவரும் விவேக் மீது பற்றும் அன்பும் கொண்டவர். இந்த செய்தி கேட்டவுடனேயே உடனடியாக நாங்கள் சென்று இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என விஜயகாந்த் கூறினார்.

ஆறுதல் என்பது வெறும் வார்த்தைகள்தான். அவருடைய மனைவி,  மகள்களுடன் பேசும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும்" என  தெரிவித்தார்.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

சனி 17 ஏப் 2021