மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

விவேக் மரணம் - தெளிவுபடுத்தவேண்டும்: திருமாவளவன்

விவேக் மரணம் - தெளிவுபடுத்தவேண்டும்: திருமாவளவன்

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாகச் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உடல் தற்போது அஞ்சலிக்காக விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில்  வைக்கப்பட்டுள்ளது.

திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் எனப் பலரும்  வந்து அவருக்கு  அஞ்சலி  செலுத்திச்  செல்கின்றனர்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், “நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நடிகர் விவேக்கின் உடல்நிலை பாதிப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அதுபோன்று அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர், “எங்கள் மருத்துவமனையில், இதுவரை 45 முதல் 95 வயதுடைய 10 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளோம். யாருக்கும் இதுபோன்று ஏற்பட்டதில்லை” என்று விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

சனி 17 ஏப் 2021