மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

மறக்க முடியாத நாட்கள்: ரஜினி

மறக்க முடியாத நாட்கள்: ரஜினி

சிவாஜி படப்பிடிப்பில் விவேக்குடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் மறக்க முடியாத நாட்கள் என மறைந்த நடிகர் விவேக்கிற்கு, நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினியின் மாமாவாக நடித்திருந்தார் விவேக். ரஜினியும், விவேக்கும் சேர்ந்து செய்த காமெடி இன்றளவும் பிரபலம்.

கருப்பு, சிவப்பு நிறம் பற்றிய காட்சி ஒன்றில் நடிகை ஸ்ரேயாவிடம் ’ ஏய் யார பாத்து கருப்புங்குற... தமிழ்நாடே கொந்தளிக்கும் ஆமா... ராமர் கருப்பு, கிருஷ்ணர் கருப்பு... காமராஜர் கருப்பு... கவிபேரரசு வைரமுத்து கருப்பு... அந்த பியானோ கருப்பு... திரட்சை கருப்பு ... ஏன் திராவிட இனத்தின் உண்மையான நிறமே கருப்பு... தமிழகத்தில் மட்டும் 2 விஷயங்களை பற்றி பேசவேக் கூடாது... ஒன்னு கற்பு, இன்னொனு கருப்பு’ என அவர் பேசிய காமெடி வசனங்களுக்கு தியேட்டர்களில் கைத் தட்டல்களை அள்ளியது.

இந்நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ”சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 17 ஏப் 2021