மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

விவேக்கிற்கு 4 பெண் குழந்தைகள்!

விவேக்கிற்கு 4 பெண் குழந்தைகள்!

சின்ன கலைவாணர், கருத்து கந்தசாமி என்று அழைக்கப்படும் விவேக், மாரடைப்பு காரணமாக இன்று (ஏப்ரல் 17) காலமானார்.

அவர் சிகிச்சை பெற்ற சிம்ஸ் மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விவேக்கின் மறைவு அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விவேக்கின் மனைவி அருட்செல்வி. முதலில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் பிறந்தனர். மகள்களில் மூத்தவர் அமிர்த்தா நந்தினி, இளைய மகள் தேஜஸ்வனி. மூன்றாவதாகப் பிறந்தவர் மகன் பிரசன்ன குமார்.

பிரசன்ன குமார் இசை மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் கீபோர்டு பிரிவில் பட்டம் பெற்றவர். தனது 13ஆவது வயதில், 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது, 2015ஆம் ஆண்டு மூளை காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

தனது ஒரே மகனை இழந்தது விவேக்கை நீங்கா துயரில் ஆழ்த்தியது. அவரது மகன் நினைவாக குழந்தைகள் ட்ரஸ்ட் ஒன்றையும் நடத்தி வந்தார் விவேக். அதோடு மீண்டும் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்பதால், ஜிஜி செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து அவரது மனைவி கருவுற்ற நிலையில், மீண்டும் தங்களது மகனே வந்து பிறக்க போகிறான் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அக்குழந்தைகளுக்குச் சிறு பிரச்சினை என்றாலும், தானே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருவாராம் விவேக்.

“நான் இளம் வயதாக இருக்கும் போது, என் அப்பா அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படுவார். அம்மாவுடன் தான் வளர்ந்தேன். சாலையில் ஒரு குழந்தை அப்பா, அம்மாவோடு நடந்து சென்றாலே ஆச்சரித்துடன் பார்ப்பேன். அப்பாவை ரொம்ப மிஸ் செய்வேன். அது அப்படியே எனது பிள்ளைகளுக்கும் இருக்க கூடாது என்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம், குடும்பத்தினருடன் ஒட்டிக்கொள்வேன்” என்று நகைச்சுவை கலந்த தனது பாணியில் விவேக் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த சூழலில் விவேக்கின் திடீர் மரணம் குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

-பிரியா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

சனி 17 ஏப் 2021