மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

சின்ன கலைவாணர் விவேக் காலமானார்!

சின்ன கலைவாணர் விவேக் காலமானார்!

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

தனது சமூக அக்கறையுடன் கூடிய நகைச்சுவையால் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் விவேக். 1987ஆம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார். அதன்பிறகு நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார்.

2009ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். ஊசியை செலுத்தி கொண்ட பின்னர், 'எல்லோரும் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்திக்கொள்ள வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக, மோசமான நிலையில் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு இடது ரத்த குழாயிலிருந்த அடைப்பு நீக்கப்பட்டது. தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரம் விவேக் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார், அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

விவேக் நலம் பெற வேண்டி தமிழக முதலமைச்சர் முதல் திரை பிரபலங்கள், ரசிகர்கள் வரை பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

-பிரியா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

சனி 17 ஏப் 2021