மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

ஆலோசகர்கள்: ஸ்டாலின் மனதில் இரு அதிகாரிகள்!

ஆலோசகர்கள்: ஸ்டாலின் மனதில் இரு  அதிகாரிகள்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பில்லை என்று நீண்டதொரு புகார் கடிதத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும், தமிழக தேர்தல் ஆணையருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

இப்படி ஒருபக்கம் ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்புகளில் திமுக விழிப்போடு இருக்க, இன்னொரு பக்கம், திமுக ஆட்சிதான் அமையப் போகிறது என்ற நம்பிக்கையில் அடுத்த கட்ட கணக்குகளையும் திமுகவினர் போட்டு வருகின்றனர்.

யார் அமைச்சர் என்ற பட்டியல் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்க இன்னொரு பக்கம் வர இருக்கும் ஸ்டாலின் ஆட்சி திமுக ஆட்சி மீதான வழக்கமான விமர்சனங்கள் இல்லாத ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற முனைப்பும் திமுகவிடம் இருக்கிறது.

”அடுத்து திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்ல முக்கியமான சில அதிகாரிகளையும் இப்போதே முடிவு செய்துவிட்டனர். ஏப்ரல் 6ஆம் தேதிக்குப் பிறகு பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஸ்டாலினை சந்தித்தனர். பல்வேறு ஆலோசனைகளயும் அறிவுரைகளையும் வழங்கினார்கள்.

இந்த நிலையில் அடுத்து தான் ஆட்சி அமைத்தால் குறிப்பிட்ட இரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையே தனது ஆலோசகர்களாக வைத்துக் கொள்வது என்ற முடிவில் இருக்கிறார் ஸ்டாலின். அந்த இரு அதிகாரிகளும் ஏற்கனவே கலைஞரிடம் பணியாற்றியவர்கள். அவரின் நன்மதிப்பைப் பெற்றவர்கள். தனக்கும் நெருக்கமான அவர்களை தனது ஆலோசகர்களாக வைத்துக் கொள்வதுதான் ஸ்டாலினின் இப்போதைய திட்டம். அதாவது அரசு ரீதியான பதவிகளைத் தாண்டி தனக்கென ஆலோசனை சொல்வதற்கான சிறப்பு ஆலோசகர்களாக அந்த இருவரையும் டிக் செய்து வைத்துள்ளார் ஸ்டாலின்” என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்

-வேந்தன்

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

சனி 17 ஏப் 2021