மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு!

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு!

அனைத்து ஆக்சிஜன் நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பும் இடங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் நேற்று மட்டும் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அதுமட்டுமில்லாமல், மருத்துவமனைக்கு வெளியில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றது.

ஒருபக்கம் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, மற்றொரு பக்கம் தடுப்பூசிக்கும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. சமீபத்தில் மும்பையில் உள்ள 2 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேரும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 பேரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அதிகாரிகளுடன் டெல்லியில் இன்று(ஏப்ரல் 16) அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதையடுத்து, பிரதமரின் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ” நாடு முழுவதும் அனைத்து ஆக்சிஜன் நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் இடங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி செல்லும் டேங்கர் உள்ளிட்ட வாகனங்கள் தடையின்றி செல்வதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

தொழில்துறை ஆக்சிஜன் சிலிண்டர்களையும் உரிய தூய்மைப்படுத்தலுக்கு பிறகு மருத்துவமனையில் பயன்படுத்த அரசு அனுமதிக்கிறது. தட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் நைட்ரஜன் மற்றும் ஆர்கான் டேங்கர்களை ஆக்ஸிஜன் டேங்கர்களாக மாற்ற அனுமதிக்கப்படும். இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.

மருத்துவ தர ஆக்ஸிஜனை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக மருத்துவமனைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வெள்ளி 16 ஏப் 2021