மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

விவேக்கிற்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி!

விவேக்கிற்கு  மாரடைப்பு:  மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருப்பவர் நடிகர் விவேக். நடிப்பு மட்டுமின்றி சமூக விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். கொரோனா பரவும் சூழலில் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வில் ஈடுபட்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்குத் தயக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், நேற்று, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா தடுப்பூசி குறித்து பலவித வதந்திகள் பொதுமக்களிடையே உலா வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. பாதுகாப்பு உண்டு. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனா வராது என்று சொல்லவில்லை. வந்தால் உயிரிழப்பு இருக்காது. தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் வைரஸ் பரவல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளைக் கடைப் பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழிபோடுவது தவறு” என்று தெரிவித்திருந்தார்.

நேற்று அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலிருந்தபோது விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து விவேக் குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வெள்ளி 16 ஏப் 2021