மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

தேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

தேர்தல் முடிவு:  எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத கால இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனில், அதிமுகவுக்காக எக்சிட் போல் ஆய்வுகளை நடத்தி வருகிறார்.

தேர்தல் முடிந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கள விசாரணைகள் மூலம் முதற்கட்ட விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பிய சுனில் குழுவினர்... வாக்குப் பதிவு சதவிகிதம், முதல் முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் என்று கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களோடும் முதல்வர் எடப்பாடி நேரடியாகவும் தொலைபேசி வழியாகவும் பேசியிருக்கிறார். தேர்தலுக்குப் பின் ஒரு சில நாட்கள் வரை மட்டுமல்ல, தொடர்ந்து பல தரப்பட்டவர்களிடமும் பேசி புதிய புதிய விவரங்களைக் கேட்டுப் பெறுகிறார் எடப்பாடி பழனிசாமி.

இதற்கிடையே தேர்தல் வியூக வகுப்பாளராகத் தனக்கு செயல்பட்டு வரும் சுனிலிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. லேட்டஸ்டாக சுனில் குழுவினர் எடப்பாடிக்குக் கொடுத்த ரிப்போர்ட்டில், ‘அதிமுக கூட்டணிக்கு 85 முதல் 90 தொகுதிகள் வரை கிடைப்பது 100% உறுதி. மேலும் 27 தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதிகளில் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்தும் யார் வென்றாலும் மயிரிழை வெற்றியாக இருக்கும் என்றே தெரிகிறது” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனபோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்குக் கிடைத்த சுனில் உள்ளிட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்” என்கிறார்கள்.

-வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

வெள்ளி 16 ஏப் 2021