மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

சாலைகள் பெயர் மாற்றம்: தலைமைச் செயலாளரிடம் திமுக புகார்

சாலைகள்  பெயர் மாற்றம்:  தலைமைச் செயலாளரிடம் திமுக புகார்

சில நாட்களாகவே தமிழக நெடுஞ்சாலைத் துறையின் இணைய தளத்தில் முக்கிய தலைவர்களின் பெயர் சூட்டப்பட்ட சாலைகளுக்கு அப்பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்டு, கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்டிருக்கிறது. அண்ணாசாலையின் பெயர் கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு எனவும், காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயர் ‘கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பெரியார் ஈ.வெ.ரா. சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய விளக்கமோ, பதிலோ கொடுக்கப்படாத நிலையில், அண்ணாசாலை, காமராஜர் சாலை பெயரும் மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தமிழகத்தின் பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 15) திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்ட செயலாளர் வில்சன், தலைமை சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ ஆகிய மாநிலங்களவை உறுப்பினர்களும் தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலாளரை சந்தித்து திமுக தலைவர் கொடுத்த புகார் மனுவை அவரிடம் அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆலந்தூர் பாரதி, “ சாலைகள் பெயர் மாற்றம் குறித்து இதுவரை தெளிவான விளக்கம் எதுவும் அரசிடம் இருந்து வரவில்லை. இதுகுறித்து திமுக தலைவர் கொடுத்த மனுவை தலைமைச் செயலாளரிடம் கொடுத்திருக்கிறோம்.

மூன்று தலைவர்களின் பெயரை ஏன் மறைக்கிறார்கள்? யாருடைய தூண்டுதலின் பேரில், யாரை திருப்திப் படுத்த இது செய்யப்படுகிறது? ” என்று கேள்வி எழுப்பியவர்,

“ ஏற்கனவே சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு காமராஜர், வெளிநாட்டு முனையத்துக்கு அண்ணா பெயரை கலைஞர் முதல்வராக இருந்தபோது வைத்த கோரிக்கையை ஏற்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங் சூட்டினார். அப்போது நான் ஆலந்தூர் நகராட்சித் தலைவராக இருந்தேன்”என்பதையும் நினைவுகூர்ந்தார்.

-வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

வியாழன் 15 ஏப் 2021