மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

ப்ளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுமா?

ப்ளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுமா?

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக இன்று (ஏப்ரல் 15) முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ப்ளஸ் 2 பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கு மாணவர்கள் தயாராகி வரும் அதே வேளையில் தமிழகத்தில் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கருத்தில்கொண்டு, மே மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்தும் மத்திய கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி தமிழகத்துக்கும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பொதுத் தேர்வைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; குறைந்தபட்சம் சிபிஎஸ்இ போன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒத்திவைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வியாழன் 15 ஏப் 2021