மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

90 களின் பிற்பகுதி: மாரிசெல்வராஜ் மீது மீண்டும் விமர்சனம்!

90 களின் பிற்பகுதி:  மாரிசெல்வராஜ் மீது மீண்டும் விமர்சனம்!

சமீபத்தில் வெளியான கர்ணன் படம் பலரது வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கலவரம் காரணமாக பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்படுவது சாதாரண ஒரு செய்தியாக இருந்தாலும் அதன் விளைவுகள், வலிகள் என்று கதை போகிறது. கர்ணன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றாலும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்து அப்படத்தின் மீதான முக்கிய ‘ரிமார்க்’ ஆக அமைந்தது.

“கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ் அவர்கள், அண்ணன் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள், இயக்குநர் மாரி செல்வராஜ் என மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி”என்று குறிப்பிட்டிருந்தார் உதயநிதி.

இதுபற்றி இயக்குனர் மாரி செல்வராஜிடம் உதயநிதி பேசிட, ‘நான் மாத்திடுறேன்’ என்று சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ். அதன்படி முதலில் 1997இல் நடந்த சம்பவம் என்ற வார்த்தைகள் 90 களின் பிற்பகுதியிலிருந்து என இப்போது மாற்றப்பட்டுள்ளன.

இது தவறை சுட்டிக் காட்டியவர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. ” 1995 என்பது 90 களின் மத்தியப் பகுதி. படத்தில் மாற்றிய வார்த்தைகளைப் போல 90 களின் பிற்பகுதி என்றால் அது 96 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சிதான். இதுவரை ஆட்சி செய்த திமுகவின் அரசுகளிலேயே மாற்றுக் கட்சியினர் கூட பாராட்டும் அரசு 96-2001 அரசுதான். இந்நிலையில் 95 இல் நடந்த கொடியன்குளம் சம்பவத்தை 90களின் பிற்பகுதி என்று குறிப்பதன் மூலம் மாரி செல்வராஜ் வரலாற்றின் காலத்தை மீண்டும் பிழையாகவே சொல்கிறாரா, அவருக்கு திமுக மீது தனிப்பட்ட வன்மமா?” என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 15 ஏப் 2021