மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

கும்பமேளா: காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!

கும்பமேளா: காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!

கும்பமேளா நடைபெற்று வரும் ஹரித்வார் நகரில் வெறும் 48 மணி நேரத்தில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கொரோனா பரவல் அதிகரித்து கொண்டிருக்கிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 1027 பேர் உயிரிழந்தனர். இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு, தடுப்பூசி போடும் பணி என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரின் கங்கை நதிக்கரையில் கடந்த 1 ஆம் தேதி முதல் கும்பமேளா திருவிழா நடைபெற்று வருகிறது. வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிற கும்பமேளாவில், கடந்த 12, 14 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புனித நீராடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா அதிகரித்து வருவதால், கும்பமேளாவுக்கு வருபவர்கள் கொரோனா நெக்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், கும்பமேளாவிற்கு வரும் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்ட நெரிசலில் சென்று வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல், இன்று நடந்த புனித நீராடலின்போது 31 லட்சம் பேர் நதியில் நீராடியதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

இதையடுத்து, 50,000 மாதிரிகளை சோதனை செய்ததில், கடந்த திங்கள் அன்று 408 பேருக்கும், நேற்று புதிதாக 594 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட 102 பக்தர்கள், 20 சாமியார்களுக்கும் இதுவரை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகையில், கும்பமேளா திருவிழாவிற்கு அரசு அனுமதி அளித்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கும்பமேளா விழா ஏற்பாடு குழுவில் உள்ள ஒருவரான சித்தார்த் சக்ரபாணி கூறுகையில், “எங்களுக்கு, எங்கள் நம்பிக்கை மிகப்பெரிய விஷயம். அந்த வலுவான நம்பிக்கையின் காரணமாகவே கங்கையில் நீராட இவ்வளவு பேர் இங்கு வந்துள்ளனர். கங்கை தாய் கொரோனாவிலிருந்து அவர்களை காப்பாற்றும் என நம்புகிறார்கள் ”என்று கூறினார்.

இதன் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்,”தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

புதன் 14 ஏப் 2021