மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

தமிழகத்தில் ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். விளக்கம்!

தமிழகத்தில் ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். விளக்கம்!

அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றினால் கொரோனா தொற்று குறைய வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று(ஏப்ரல் 14) சென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. தொற்றை எதிர்கொள்ள போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். அதேசமயம், தடுப்பூசி போடுவது மிக முக்கியம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்த தற்போது வாய்ப்பில்லை. இரவு நேர ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது அது கொள்கை சார்ந்த முடிவு. முதல்வருடன் கலந்து ஆலோசிக்காமல் எதுவும் சொல்ல முடியாது. தமிழகத்தில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் அவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த 2.39 லட்சம் பேரிடம் 5.7 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை 9.74 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கபட்டதாகவும், நேற்று ஒரே நாளில் 1284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். வாய்ப்புள்ளவர்கள் முடிந்தவரை, வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள். தொழிற்சாலைகள், வேளாண்மை ஆகிய துறைகள் சார்ந்து எந்தவொரு நோய்ப் பரவலும் ஏற்படவில்லை. தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, குடியிருப்பு நல மையங்களின் நிர்வாகிகளை அழைத்து, அவர்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி 91.6 சதவிகிதம் பாதுகாப்பு உடையது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்கு கிடைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் தமிழகத்திலும் கிடைக்கும்.

அடுத்த இரண்டு வாரங்கள் மிக சவாலானவை. அதனால், அந்த காலகட்டத்தில் மக்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றினால் நோய் பரவல் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. தடுப்பூசி போட்ட பின்னர் முகக்கவசம் தேவையில்லை என மக்கள் நினைக்க வேண்டாம். தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்பு வரும் கொரோனா பாதிப்பு அந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

தற்போது தொடங்கி வைக்கப்பட்ட விழிப்புணர்வு வாகனங்கள் 15 மண்டலங்களில் சுற்றி வந்து, பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும். கொரோனா தடுப்பூசி குறித்து வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.

வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

புதன் 14 ஏப் 2021