மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றம்!

அண்ணாசாலை  - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றம்!

நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையில் ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்டு, கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று குறிப்பிடப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பெரியார் பெயரை நீக்குவதா என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினர். மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று மாற்றவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில், நெடுஞ்சாலை இணையதளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்டிருக்கிறது. அண்ணாசாலையின் பெயர் கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு எனவும், காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயர் ‘கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பெரியார் ஈ.வெ.ரா. சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய விளக்கமோ, பதிலோ கொடுக்கப்படாத நிலையில், அண்ணாசாலை, காமராஜர் சாலை பெயரும் மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவே, ‘அண்ணா சாலை’யின் பெயரும் சென்னை காமராசர் சாலையின் பெயரும் மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

அதாவது ‘மவுண்ட் ரோடு’ என்பது ‘அண்ணா சாலை’ என்று மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அண்ணாவுக்கும், காமராசருக்கும் செய்துள்ளனர்!. விமான நிலையத்தில் அண்ணா, காமராசர் பெயர்களும் அகற்றப்பட்டு, அப்படியே நீடிக்கும் கொடுமையில் மாற்றமில்லை. விரைவில் இந்த அநியாய அக்கிரமங்களைக் கண்டித்து, மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடங்க மக்களைத் தமிழ்நாட்டு அதிமுக அரசு ஏனோ தூண்டுகிறது!

வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்! அரசே இப்படி போராட்டங்களைத் தூண்டலாமா?. அண்ணா பெயரில் கட்சி - ஆனால், அண்ணா பெயருக்கும் ஆபத்து என்றால், இதன் ‘‘மூலப் புருஷர்கள்’’ யார்? எந்தப் பின்னணியில் இந்த விஷமங்கள் விதைக்கப்பட்டன? தமிழ்நாட்டு மக்களே, அறைகூவல்கள் எப்படி உருக்கொள்கின்றன பார்த்தீர்களா?” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றி தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?

வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்?. உடனடியாக இந்த உத்தரவுகளைத் திரும்பப் பெற்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரிலேயே அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 14 ஏப் 2021