மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

சீமானின் உயிர் நேயம்: சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!

சீமானின் உயிர் நேயம்: சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!

கோடை காலம் தொடங்கிவிட்டது. அக்னி நட்சத்திரம் வறுத்தெடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்களில் ஒவ்வொரு வருடமும் வழக்கம்போல அரசியல் தலைவர்கள், “கோடை வெப்பத்தால் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நமது கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களுக்கு உதவ வேண்டும்”என்று தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

அதன்படியே அரசியல் கட்சியினர் கோடை வெயிலில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக தண்ணீர்ப் பந்தல்களும், மோர் பந்தல்களும் வைத்து குளிர்ச்சி சேவை செய்து வருகின்றனர். இதுமாதிரியான தண்ணீர் பந்தல்களில் தொடக்க விழாவுக்கு ஆகும் செலவை வைத்து முழு கோடை காலத்தையே சமாளித்துவிடலாம். ஆனால் அடுத்த சில நாட்களில் தண்ணீர் பந்தலில் எதுவுமின்றி தெருநாய்களின் கூடாரமாகிவிடும்.

சில இடங்களில் தண்ணீர் பந்தல் என்பது நில அபகரிப்புக்கான அச்சாரமாகவே அமைந்துவிடும்.எப்படியெனில் தண்ணீர் பந்தலை பொது இடத்தில் அமைப்பார்கள். கோடை காலம் முடிந்தும் அதை காலி செய்ய மாட்டார்கள். அப்படியே மெல்ல மெல்ல அந்த இடத்தை ஆட்டையைப் போட்டு ஆக்கிரமிப்பு செய்துவிடுவார்கள். இப்படியும் தண்ணீர் பந்தல் தகிடுதத்தங்கள் நடக்கின்றன.

இந்த நிலையில் சக அரசியல் கட்சிகளை விட ஒருபடி மேலே போய், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தன் கட்சியினருக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

“வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது போல பிற உயிரினங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும், ஆதலால் உறவுகள் அனைவரும் தங்கள் வீடுகளின் முகப்பில் அல்லது மாடியில் பறவைகளுக்கும், பிற சிற்றுயிர்களுக்கும் தண்ணீர்த்தொட்டி அமைத்து உயிர்நேயம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”என்று கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி சீமான் வைத்த வேண்டுகோளுக்கிணங்க, மனிதர்களுக்கான தண்ணீர் பந்தலை விட கோடை காலத்தில் வாடும் விலங்குகளுக்கும், பறவைகளுக்குமான தண்ணீர் தொட்டிகளை அதிகம் திறந்திருக்கிறார்கள்.

இதில் மாடுகளும் ஆடுகளும் பறவைகளும் நீர் அருந்திச் செல்கின்றன. ஆடு மாடுகளுக்கு படிக்கத் தெரியாது.அதனால், ‘நாம்தமிழர் கட்சியினர் தான் நமக்கு தண்ணீர் வைத்திருக்கிறார்கள்’ என்று அவற்றுக்குத் தெரியாது. இன்னொரு முக்கிய விஷயம் ஆடு, மாடுகளுக்கு வாக்குகள் கிடையாது. ஆனபோதும் மனித நேயத்தைத் தாண்டிய உயிர் நேயத்தோடு நாம் தமிழர் கட்சியினர் வைத்திருக்கும் தண்ணீர் தொட்டிகள் சமூக தளங்களில் பாராட்டுகளை குவித்து வருகின்றன.

குறிப்பாக சென்னையை அடுத்த மறைமலை நகர் நகராட்சியில் நாம் தமிழர் கட்சியினர் விலங்குகள், பறவைகளுக்காக தண்ணீர் தொட்டிகளை அதிக அளவில் திறந்து வருகின்றனர். “கடந்த ஆண்டே மறைமலைநகர் நகராட்சி முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்ட விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகளை சேகரித்து இந்த ஆண்டு புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். இப்போது தேவைப்படும் இடங்களில் புதிய தொட்டிகளை தயார் செய்யும் பணியும் நடக்கிறது”என்கிறார்கள் அவர்கள்.

-ஆரா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

புதன் 14 ஏப் 2021