மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

வீடு திரும்பினார் துரைமுருகன்: டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா!

வீடு திரும்பினார் துரைமுருகன்: டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா!

தேர்தல் களத்தில் பணியாற்றிய அரசியல் கட்சியினர் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்குக் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இரண்டு டோஸும் செலுத்திக் கொண்டிருப்பதால், அவருக்குப் பெரிய பாதிப்பு இல்லை, உடல் நிலை முன்னேறி வருகிறது. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, சிகிச்சைக்குப் பின்னர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார் துரைமுருகன்.

இந்த சூழலில், திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யுமான டி.ஆர். பாலுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு ஏற்கனவே கோவாக்சின் முதல் டோஸை போட்டுக்கொண்டிருக்கிறார். இருப்பினும் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தந்தையார் டிஆர்பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவு கூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று, திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 14 ஏப் 2021