மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், நாட்டில் முழு அளவில் ஊரடங்கு அமல்படுத்த வாய்பில்லை என்றும், உள்ளூர் கட்டுப்பாடுகள் மட்டுமே கடுமையாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அந்தந்த மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, மகாராஷ்டிராவில் 15 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முழு அளவில் ஊடரங்கு அமல்படுத்துவதில் மத்திய அரசின் நிலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸுடன் காணொலி மூலம் நிர்மலா சீதாராமன் நேற்று உரையாடினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சிக்காக கடன் வழங்கும் இடத்தை அதிகரிக்க சர்வதேச நிதி நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையை எதிர்க்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பக்கத்தில், “ இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு ஐந்து அம்ச திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவினாலும், நாடளவில் முழு ஊரடங்கு போடப்படுவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும், மீண்டும் பொருளாதாரத்தை முற்றிலும் முடக்க அரசு விரும்பவில்லை.

கொரோனா தொற்று உறுதி செய்து கொண்டவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுதல், உள்ளூர் கட்டுப்பாடுகள் கடுமையாக்குதல் உள்ளிட்டவற்றின் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்தாண்டு போன்று, இந்தாண்டு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரிக்கப்படும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் தொடர்ச்சியான தொடர்பு இருந்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் இடையிலான தகவல் பகிர்வு சிறப்பாக இருக்கிறது” என தெரிவித்தார்.

வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

புதன் 14 ஏப் 2021