மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

தமிழ் புத்தாண்டு: ஜோ பைடன் வாழ்த்து!

தமிழ் புத்தாண்டு:  ஜோ பைடன் வாழ்த்து!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் உள்ள இந்தியா, மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இந்த வாரத்தில் புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. இன்று, தமிழ் மற்றும் கேரள மக்கள் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த வாரம் வைசாக்கி, நவராத்திரி, சாங்க்கிரான் மற்றும் வரவிருக்கும் புத்தாண்டைக் கொண்டாடும் தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூகங்களுக்கு என் அன்பான புத்தாண்டு வாழ்த்துகளை அனுப்புகிறேன். பெங்காலி, கம்போடியன், லாவோ, மியான்மரீஸ், நேபாளி, சிங்கள, தமிழ், தாய், விஷு புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புத்தாண்டு தினத்தில், தமிழ்நாட்டில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும் என, தமிழில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, “தமிழகத்துச் சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “அன்பும் அமைதியும் நிலவி, நலமும் வளமும் பெருகி, மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் வாழ உலகெங்கும் உள்ள தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

இதுபோன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்படப் பலரும் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 14 ஏப் 2021