மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

தோப்புக்கரணம் போடத் தயாரா: மோடிக்கு மம்தா சவால்!

தோப்புக்கரணம்  போடத் தயாரா: மோடிக்கு மம்தா சவால்!

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் 17ஆம் தேதி 5ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பாஜக அளித்த புகாரின் பேரில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 24 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இந்த தடை நேற்று இரவு 8 மணியுடன் நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மம்தா. பாராசட் என்ற இடத்தில் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய அவர், மேற்குவங்க மாநிலத்தைக் குஜராத் போன்று மாற்ற அனுமதிக்க மாட்டோம். உங்களிடம் பணம் உட்பட எல்லா அமைப்புகளும் இருக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் நீங்கள் தோல்வி அடைவீர்கள்.

மதுவா சமூகத்திற்காக நான் எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். அவருக்கு நான் சவால் விடுகிறேன். இந்த சவாலை அவர் ஏற்க வேண்டும். மதுவா சமூகத்திற்கு நான் எதுவும் செய்யவில்லை என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். அதே சமயத்தில் நீங்கள் பொய் சொல்லி இருக்கிறீர்கள் என்று நிரூபித்தால் தோப்புக்கரணம் போட தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.

மேலும் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் என்று கூறியதில் என்ன தவறு உள்ளது. இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து எனக்கு வாக்கு வேண்டும். இந்த தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்று தெரிந்து கொண்டதாலேயே மத்திய அமைப்புகளிடம் உதவி பெற்று எனது பிரச்சாரத்தை பாஜக தடுத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு நாட்களில் மோடி பிரச்சாரம் செய்வதைத் தேர்தல் ஆணையம் ஏன் தடுப்பதில்லை?. தேர்தல் நாளன்று பொதுக்கூட்டங்களை ரத்து செய்ய நான் தயாராக உள்ளேன். பிரதமர் மோடி தனது பொய்களால் மக்களைத் தவறாக வழி நடத்துகிறார் என்று சரமாரியாகப் பேசினார் மம்தா.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 14 ஏப் 2021