மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு!

வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு!

சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங்க் ரூமில் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வேளச்சேரி தொகுதியில், ஒரு வாக்குச்சாவடியிலிருந்து இருசக்கர வாகனத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. முதலில் இது பயன்படுத்தப்படாத மற்றும் பழுதான இயந்திரங்கள் என்று தகவல் வெளியான நிலையில், “வேளச்சேரியில் எடுத்துச்செல்லப்பட்ட இயந்திரங்கள் 50 நிமிடங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுகள் இருந்தது. இந்தத் தேர்தல் விதிமீறல் தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பதைத் தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “வேளச்சேரி தொகுதியின் 92ஆம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு வரும் 17ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும். அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் விரிவான விளம்பரங்கள் செய்யப்படும். மறு வாக்குப்பதிவு குறித்த தகவல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கு எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கப்படும். மறு வாக்குப்பதிவினை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்திடத் தேவையான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி தொகுதியில் 23 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் எம்.கே.அசோக், காங்கிரஸ் சார்பில் ஜெ.எம்.எச்.ஹஸன், அமமுக சார்பில் எம்.சந்திரபோஸ், மக்கள் நீதி மய்யம் சார்பில் சந்தோஷ் பாபு, நாம் தமிழர் கட்சி சார்பில் மோ.கீர்த்தனா ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

புதன் 14 ஏப் 2021