மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

துரைமுருகன் இன்று டிஸ்சார்ஜ்?

துரைமுருகன் இன்று டிஸ்சார்ஜ்?

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதால், பெரிய பாதிப்பு இல்லாமல் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குணமடைந்து வருவதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு (82) சில தினங்களுக்கு முன் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மட்டுமல்லாமல் அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் சகோதரர் உள்ளிட்டோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தடுப்பூசியின் 2 டோஸும் செலுத்தப்பட்ட பிறகும் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

முதலில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட துரைமுருகன், பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட ரேலா மருத்துவமனை, “துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை கவலைப்படும் அளவுக்கு இல்லை. இதயத்துடிப்பு மற்றும் நாடித்துடிப்பு உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும், இன்று (ஏப்ரல் 14) அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துரைமுருகன் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸும் செலுத்திக் கொண்டிருப்பதால், இந்த வயதிலும் அதிக ரிஸ்க் இல்லாமல், அவரது உடல் தாக்குப்பிடித்திருக்கிறது என்று மருத்துவர்கள் பாராட்டியிருக்கின்றனர். எனவே இன்று அவர் டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

அதுபோன்று அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

புதன் 14 ஏப் 2021