மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

ஆட்சி மாறினால்...: ஸ்டாலினுக்கு தூதுவிடும் அமைச்சர்?

ஆட்சி மாறினால்...: ஸ்டாலினுக்கு தூதுவிடும்  அமைச்சர்?

சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் வரும் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற விவாதங்கள் டீகடைகள் முதல் கோட்டை வரை அனைத்து தயாரிப்பினரிடையேயும் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியில உள்ள சிலர் மிகவும் நம்பிக்கையாக இருந்தாலும்... அமைச்சர்கள் வட்டாரத்தில் சிலரே, ஒருவேளை முடிவு ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலும் வகையில் இருந்தால் தாங்கள் என்ன செய்வது என்பதற்கான தற்காப்பு முயற்சிகளில் இறங்கி விட்டதாக தகவல்கள் வருகின்றன.

அதிகாரிகள் வட்டாரத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்ற பேச்சு சில நாட்களாகவே ஓங்கி ஒலித்து வருகின்ற நிலையில் சாட்சிக்காரனை விட சண்டைக்காரனிடம் பேசி விடுவது உத்தமம் என்ற பழமொழிக்கேற்ப, அதிமுக தரப்பில் சிலர் முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்று அதிமுக தரப்பிலேயே பரபரப்பான பேச்சுக்கள் அடிபடுகின்றன.

“அதிமுக அமைச்சரவையில் மிகவும் முக்கியமான அமைச்சராக கருதப்பட்டவர் விஜயபாஸ்கர். சுகாதாரத்துறை அமைச்சராக தொடர்ந்து 2 முறை பதவியில் இருக்கும் விஜயபாஸ்கருக்கு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பி.ஏ.க்கள் இருக்கிறார்கள்.அரசியல் துறைக்கென்றும், அரசுத் துறைகளுக்கென்றும் விஜயபாஸ்கருக்கு பி.ஏ.க்கள் பலர் இருக்கிறார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் பலரும் அறிந்ததுதான்.

சில நாட்களுக்கு முன் விஜயபாஸ்கரின் உதவியாளர்களில் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினை சுற்றி இருக்கும் ஒரு முக்கிய பிரமுரிடம் பேசியுள்ளார். ‘உங்க தலைவர் அதிமுக ஆட்சியில் மற்ற அமைச்சர்களை விட எங்க அமைச்சர் மேல தான் அதிக கோபமாக இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்திலேயே அவருடைய பேச்சில் அது தெரிந்தது. உங்க தலைவர் கிட்ட கொஞ்சம் சொல்லுங்க. ஒருவேளை ஆட்சி மாறினால் கூட எங்க அமைச்சர் மீது கோபம் காட்ட வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்ற ரீதியில் அவர் பேச.... ஸ்டாலினுக்கு நெருக்கமான அந்த திமுக பிரமுகர் எந்த உறுதியான பதிலும் சொல்லாமல் எந்த உத்தரவாதமும் சொல்லாமல் பிடிகொடுக்காமல் பதிலளித்திருக்கிறார். ஆட்சி மாற்றத்துக்கான உணர்வு அதிமுக முக்கியப் பிரமுகர்களுக்கும் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது” என்கிறார்கள் அவர்கள்.

தனக்காக இப்படி சிலர் பேசுகிறார்கள் என்ற தகவல் அமைச்சர் விஜயபாஸ்கருக்குத் தெரியுமா, அல்லது இதெல்லாம் அவருக்கு தெரியாமலேயே நடக்கிறதா என்ற கேள்வியும் அதிமுக வட்டாரங்களில் எழுந்திருக்கிறது.

-ராஜ்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 13 ஏப் 2021