மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

மாதவராவ் மகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: திருமாவளவன்

மாதவராவ் மகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: திருமாவளவன்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக மாதவராவ் (வயது 63) போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவரது மகள் திவ்யா தீவிர பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார் மாதவராவ் . இந்நிலையில் இன்று (ஏப்ரல் 13) மாதவராவ் இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய விசிக தலைவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மாதவராவ் எனக்கு கல்லூரி பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர். நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பின்னர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது அவரது மறைவு வேதனை அளிக்கிறது. இந்த தேர்தலில் மாதவராவ் வெற்றி பெறுவது உறுதி. எனவே காங்கிரஸ் கட்சி அவர்களது குடும்பத்துக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். மாதவராவ் மகள் தேர்தலில் நிற்கத் தகுதி படைத்தவராக இருக்கிறார். எனவே, இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவதற்குக் காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், கொரோனா பரவி வரும் நிலையில், மக்கள் தமிழக அரசின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர், பாஜக மிக மோசமாக தேர்தலை அணுகுகிறது. தனிப்பட்ட வகையில் விமர்சனங்களை முன் வைக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்குப் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது என்றார்.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

செவ்வாய் 13 ஏப் 2021