மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

மேலும் இரு வேட்பாளர்களுக்கு கொரோனா: முதல்வர் அதிர்ச்சி!

மேலும் இரு வேட்பாளர்களுக்கு  கொரோனா: முதல்வர் அதிர்ச்சி!

தேர்தல் களத்தில் சுமார் ஒரு மாத காலம் பயணித்த பலரையும் கொரோனாவின் இரண்டாவது அலை மிரட்டி வருகிறது.

ஏற்கனவே கொரோனா தொற்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் மரணம் அடைந்த நிலையில் கொரோனா தொற்று பற்றிய அச்சம் அரசியல் வாதிகள் மத்தியிலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட மற்றும் பலர் மத்தியிலும் அதிகரித்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்ட பல்வேறு தலைவர்கள் தங்களை இப்போது கண்காணிப்புக்கு உட்படுத்தி வருகின்றனர். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி பிரச்சாரம் முடியும் முன்பே கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவச உடையுடன் வந்து வாக்களிக்க வேண்டிய கட்டாயமேற்பட்டது. இப்போது அவர் வீடு திரும்பினாலும் தனிமையில் இருக்கிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை, பாஜக வேட்பாளர் அண்ணாமலை என பல வேட்பாளர்களும் கொரோனா சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மேலும் 2 வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஜெயசங்கரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சோதித்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இப்போது அவர் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன் முதல்வரை சந்தித்த நிர்வாகிகளிலும் இடம்பெற்றிருந்தார்.

அதேபோல மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவரான ஸ்ரீதர் வாண்டையார் அ.தி.மு.க. கூட்டணியில் கும்பகோணம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்தநிலையில் அண்மையில் ஸ்ரீதர் வாண்டையாருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர், கொரோனா பரிசோதனை செய்து கொண்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தஞ்சையில் உறவினர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். வேட்பாளர்களுக்கு கொரோனா தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருவதால் அவர்களுக்கு பரப்புரை செய்த தலைவர்கள், அவர்களோடு பணியாற்றிய கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பதற்றமாகி வருகிறார்கள்.

-வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

செவ்வாய் 13 ஏப் 2021