மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

மம்தா பிரச்சாரம் செய்ய தடை!

மம்தா பிரச்சாரம் செய்ய தடை!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. இன்னும் நான்கு கட்ட வாக்குப்பதிவுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா என மூத்த தலைவர்கள் வங்கத்தில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடந்த பிரச்சாரத்தின்போது முதல்வர் மம்தா பானர்ஜி விதிகளை மீறி பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியதாகவும், முஸ்லிம் வாக்குகள் குறித்து விமர்சித்ததாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தில் பாஜக தரப்பினர் புகார் அளித்திருந்த நிலையில், இதற்கு மம்தா அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில் மம்தா அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி அவர் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அதன்படி நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஒரு மாநில முதல்வருக்கே பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பது, அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 13 ஏப் 2021