மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

புதிய தலைமை தேர்தல் ஆணையர்!

புதிய தலைமை தேர்தல் ஆணையர்!

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவி காலம் முடியும் நிலையில் இன்று (ஏப்ரல் 13) புதிய தலைமை தேர்தல் ஆணையராகத் தற்போது தேர்தல் ஆணையராக இருக்கும் சுஷில் சந்திரா பொறுப்பேற்கிறார்.

2019 பிப்ரவரி 14 அன்று தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் சுஷில் சந்திரா. சுனில் அரோரா மற்றும் அசோக் லாவாசா ஆகியோருடன் சேர்ந்து, அந்த ஆண்டின் மக்களவைத் தேர்தலை நடத்துவதில் பங்கு வகித்தார்.

சுஷில் சந்திரா தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில்தான் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா (அக்டோபர் 2019), ஜார்க்கண்ட் (டிசம்பர் 2019), டெல்லி (பிப்ரவரி 2020) மற்றும் பிகார் (அக்டோபர்-நவம்பர் 2020) ஆகிய சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்தினார்.

அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக இருந்து அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதிலும் சந்திரா ஈடுபட்டிருந்தார். மேற்கு வங்கத்தில் நான்கு கட்டத் தேர்தல்கள் நடைபெற்றிருக்கும் நிலையில், அடுத்த நான்கு கட்ட தேர்தல்களை சுஷில் சந்திரா தலைமை தேர்தல் ஆணையராக இருந்து நடத்த இருக்கிறார்.

சுஷில் சந்திராவின் பதவிக்காலம் 2022 மே 14 அன்று முடிவடையும். அதற்கு முன், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

சந்திரா மத்திய நேரடி வரி வாரியத்தின் (சிபிடிடி) தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவரது தலைமையில், சட்டவிரோதச் செல்வத்தையும் கறுப்புப் பணத்தையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் 2017ஆம் ஆண்டில் “ஆபரேஷன் கிளீன் மனி” என்ற திட்டத்தை வரி வாரியம் அறிமுகப்படுத்தியது.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

செவ்வாய் 13 ஏப் 2021