மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற உத்தரவு!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற உத்தரவு!

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற உயர்கல்வித்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்ததையடுத்து, வன்னியர்கள் 10.5% இட ஒதுக்கீட்டுச் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. மேலும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானதுதான் என்றும் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு வன்னியர் இட ஒதுக்கீடு இறுதியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தாலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றுப்பட்டுவிட்டதால் இந்தச் சட்டம் நிரந்தரமான சட்டம்தான், தற்காலிகமானது இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில், உயர்கல்வித்துறைச் செயலாளர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னிய சமூகத்துக்கு10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 13 ஏப் 2021