மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

மம்தா க்ளீன் போல்டு: மோடி

மம்தா க்ளீன் போல்டு: மோடி

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. வன்முறை, உயிரிழப்பு என மேற்கு வங்கத் தேர்தல் பரபரப்பாகவே நடந்து வருகிறது.

இன்னும் 4கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என மம்தாவின் திரிணமூல் காங்கிரஸும் பணியாற்றி வருகின்றன.

இதையொட்டி பிரதமர் மோடியும், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பர்தாமன் மாவட்டம் புர்பாவில் உள்ள தலித்சாய் மையத்திலும், நாடியா மாவட்டம் கல்யாணி பல்கலைக்கழக மைதானத்திலும் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அமித் ஷா ஜல்பாய் புரி மாவட்டம் துகுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

பர்தாமனில் பிரதமர் பேசுகையில், “ நந்திகிராம் மற்றும் வங்காள மக்கள் தீதியை கிளீன் போல்டாக்கி விட்டனர். மம்தாவின் குழுவினரைக் களத்திலிருந்து வெளியேற மக்கள் கூறிவிட்டனர். மேற்கு வங்க மக்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர் அடித்துவிட்டனர். இதனால் கடந்த 4 கட்ட வாக்குப்பதிவில் பாஜக செஞ்சுரி அடித்துவிட்டது” என்று விமர்சித்துள்ளார்.

மம்தாவின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2ஆம் தேதி அவர் வீட்டிற்குச் சென்றுவிடுவார் என்றும் பேசிய பிரதமர் மோடி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் பட்டியலின மக்களைப் பிச்சைக்காரர்கள் என்கிறார்கள். மம்தாவுக்குத் தெரியாமல் அவர்கள் இதுபோன்று பேச முடியாது. மம்தா அவர்களே உங்கள் கோபத்தை காட்ட விரும்பினால், அதை என் மீது காட்டுங்கள். மேற்குவங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம்.

காங்கிரஸும், இடதுசாரிகளும் வெளியேறிய பின் அதிகாரத்திற்கு வரவில்லை என்பது தீதிக்குத் தெரியும். அதுபோன்று நீங்களும் வெளியேறிய பிறகு அதிகாரத்திற்கு வரப்போவது கிடையாது” என்று கடுமையாகப் பேசியுள்ளார்.

முன்னதாக பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா, “என்னை பதவி விலக சொல்லி மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசி வருகிறார். மேற்கு வங்க மக்கள் சொன்னால் நான் பதவி விலகத் தயார். ஆனால் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணும் நாளில் மம்தா பானர்ஜிபதவி விலக வேண்டும்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

திங்கள் 12 ஏப் 2021