மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

ஊரடங்கு வருமா? முதல்வர் ஆலோசனை!

ஊரடங்கு வருமா? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுபோன்று தமிழக பொருளாதாரமும் பெரிய அளவு இழப்பைச் சந்தித்தது.

இதைத் தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும், வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனால் ஏப்ரல் 10ஆம் தேதி முதல், திரையரங்குகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 12 மணியளவில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருடன் ஆலோசனை நடந்து வருகிறது.

இதில் முழு ஊரடங்கு அமல்படுத்தலாமா அல்லது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாமா என்பது குறித்தும், வணிக வளாகங்கள், திரையரங்குகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கலாமா, டாஸ்மாக் இயங்கும் நேரத்தைக் குறைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோன்று மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ.பாஸ் கட்டாயப்படுத்துவது தொடர்பாகவும் , பொருளாதார பாதிப்பு ஏற்படாத வண்ணம் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

முதல்வர் அவசர ஆலோசனை நடத்தி வரும் நிலையில் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 12 ஏப் 2021