மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த வாய்ப்பு: செந்தில் பாலாஜி ஷாக்

வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த வாய்ப்பு: செந்தில் பாலாஜி ஷாக்

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்பட்ட சட்டமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளை உள்ளடக்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு பற்றி கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத் தேர்தல் அலுவலரைச் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 41 மையங்களில் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கரூர் மாவட்டம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தின் பாதுகாப்பு குறித்துதான் கரூர் திமுக வேட்பாளரும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தேர்தல் ஆணையத்துக்கு ஏப்ரல் 11ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அவர் அளித்துள்ள அந்தக் கடிதத்தில், "குமாரசாமி பொறியியல் கல்லூரிகள் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமரா மூலமாக நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டட அறையின் பின்புறம் உள்ள பகுதிகளைக் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் பின்புறம் வழியாக வெளியாட்கள் சென்று அங்குள்ள வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள ஒருசில கேமராக்கள் சரியாக இயங்கவில்லை. மேலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களை மேலும் அதிகரித்து மூன்று கட்டமாக சுழற்சி முறையில் பணியமர்த்தி பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்" என்று செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடந்து முடிந்த ஏப்ரல் 6ஆம் தேதியிலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் நிர்வாகிகளிடம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி வரை நமக்கு தேர்தல் பணி தொடர்கிறது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களைக் கட்சியினர் குழு அமைத்து டர்ன் டூட்டி முறையில் கண்காணிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கரூர் மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தின் பின்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாதது எதிர்க்கட்சிகள் இடையே சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

திங்கள் 12 ஏப் 2021